சுவிட்சர்லாந்துக்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தில் இன்று (03) ஆரம்பமாகிறது.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில், இன்றும், நாளையும் (04) இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1956 ஆம் ஆண்டு ஆரம்பித்தன.
அதன் பின்னர் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தன.


இந்த ஆண்டுடன் 70 ஆவது ஆண்டு நிறைவடைகிறது. அதனையொட்டி “70 Years, 70 Faces” என்ற புகைப்படக் கண்காட்சியும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த 70 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து–இலங்கை உறவுகளை கட்டியெழுப்புவதில் பங்களித்த பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது.
மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுவிட்சர்லாந்து முன்னெடுத்த அபிவிருத்தி ஒத்துழைப்பு, சமாதானம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
அத்துடன் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகள் இன்றைய நிகழ்வை அலங்கரித்தன.


இந்த நிகழ்வில் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர்
டேனியல் ஹுன் (Daniel Hunn), வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,
நாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் உப தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,
சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொட, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் போனவர்களின் உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை,
நாளைய நிகழ்வில் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி, தமிழ்ப் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நிபுணர்களின் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

தென்மராட்சி பிரதேச பண்பாட்டு விழா!
சுவிஸ் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
நன்னடத்தை பாதுகாவல் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் நியமனம்!
யாழ்.வல்லை வீதிவிபத்தில் ஆலய பூசகர் பலி!