மதவாச்சி, கடவத்தகம பிரதேச வீடொன்றில் தந்தையோடு சேர்ந்து மது அருந்திய மகன் அவரை அடித்துக் கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மூத்த மகனுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதன்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டையால் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூத்த மகனே இந்த கொலையைச் செய்துள்ளார். 47 வயதான உயிரிழந்தவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதனையடுத்து சந்தேகநபரான 42 வயதுடைய மகன், கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!