இந்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தரவு பாதுகாப்புச் சட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்குவதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்’ ஊழலை வெளிக்கொண்டு வரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வீரியத்தைக் குறைப்பதாக தெரிவித்தே இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெறுவதை இந்த புதிய சட்டம் தடுப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, தனிமனித இரகசியத்தைப் பாதுகாப்பதாகக் கூறி, அரசு இயந்திரத்தில் நடக்கும் முறைகேடுகளை மூடிமறைக்க இந்தச் சட்டம் ஒரு கேடயமாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டமானது பொது நலனுக்காகத் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்த அனுமதிக்கும் நிலையில், புதிய சட்டத்தின் 44 ஆவது பிரிவு அந்த அதிகாரத்தைப் பறிப்பதாக மனுதாரர்கள் வாதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையை, ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணான வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கும் என்றும், ஊழல்வாதிகள் தப்பித்துக்கொள்ள வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!
உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!