தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் மாதம் இன்று (19) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாவலடியிலுள்ள அன்னாரது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி,அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் உட்பட்ட
பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும், விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துமாறும், ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதி 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்ரல் 19 ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

டிஜிற்றல் முறையிலான பாடசாலை பேருந்து சேவை யாழ்.கொடிகாமத்தில் ஆரம்பித்து வைப்பு!
ஏரியில் தாமரை மலர்கள் பறிக்கச் சென்ற மாணவர்கள் நால்வர் பலி!
பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை: இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!
பிள்ளையானுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியல்!