விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் வெற்றியாளராக திவ்யா கணேஸ் திகழ்கிறார்.
இவர் 50 லட்சம் ரூபா பரிசுத் தொகையையும், மாருதி சுசூகி விக்டோரிஸ் காரையும் வென்றுள்ளார்.

திவ்யா கணேஷ் 2015 இல் “கேளடி கண்மணி” தொடரில் நடித்து தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாக்கியலட்சுமி, சுமங்கலி,விண்ணை தாண்டி வருவாயா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் வெற்றியாளராக அறிவிக்கபட்ட போது
உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார். இது தனது முதல் விருது என குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்கள்,தொடர் நாடகங்களில் நடித்திருந்தாலும் எல்லா விருது விழாக்களுக்கும் செல்வேன் ஆனால் தனக்கு விருது கிடைக்காது எனவும் இந்த வருடம் கிடைக்கும், இல்லை அடுத்த வருடம் கிடைக்கும் என காத்திருப்பேன். ஆனால் விருது கிடைக்கவில்லை.
பிக் பாஸ் செல்ல போகிறேன் என கூறிய போது என்னுடைய உறவினர்களும், நண்பர்களும் போக வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார்கள்.
இது ஒரு வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வந்தேன். ஆனால் நான் விருதை எதிர் பார்த்து வரவில்லை. என நெகிழ்வாக பேசியுள்ளார்.


நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!
மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு!
அமெரிக்காவில் நடைபெற்ற உலக திருமதி அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த சபீனா டி.யூசுப் !