தென்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இடம்பெற்ற T 20 மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து ஈடன் பாக் மைதானத்தில் இன்று (20) இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய துடுப்படுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.
தென்னாபிரிக்க அணி சார்பாக, Nqobani mokoena, 20 பந்துகளுக்கு முகங்கெடுத்து 26 ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய நியூசிலாந்து அணி
16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
நியூசிலாந்து அணி சார்பாக Tom latham, 55 பந்துகளுக்கு முகங்கொடுத்து 63 ஓட்டங்களைப் பெற்றார்.
தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இதுரை இடம்பெற்ற 3 போட்டிகளில் நியூசிலாந்து அணி 2 போட்டியிலும், தென்னாபிரிக்க அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதேவேளை, T20 நான்காவது போட்டி எதிர்வரும் 22 திகதி sky விளையாட்டு மைதானத்திலும், 5 ஆவது போட்டி
25 ஆம் திகதி ஹக்லி ஓவல் மைதானத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!
மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
உலக முடிவில் செல்பி எடுத்தபோது தவறிவீழ்ந்த மாணவி உயிருடன் மீட்பு!