வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களை தங்கவைக்கப்பட்டுள்ள யாழ். தென்மராட்சி பிரதேச மக்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று(30) நேரில் சென்று பார்வையிட்டார்.


தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் அமைக்கப்பட்டுள்ள 09 இடைத்தங்கல் முகாம்களுக்கும் சென்ற அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.


அத்தியாவசிய உதவிகளை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் 137 குடும்பங்களை சேர்ந்த 425 பேர் 09 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!