கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!

கிளிநொச்சி மாவட்டத்தில், மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் 6 கதவுகள் வான் பாய்கின்றன.

மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பனவும் வான் பாய்கின்றன.

கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் வீதியின் விவசாய பண்ணைக்கு அருகில் பனை மரம் மின்சார வயரில் வீழ்ந்து காணப்படுகின்றது.

அதனை அகற்றும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version