யாழ்.வடமராட்சி தொண்டமனாறு வல்லை – துன்னாலை வீதியை புனரமைப்புக்காக அடிக்கல் நேற்று மாலை (26) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.



வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய 3.9 கிலோ மீற்றர் வீதி, 252 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.



வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் நிஷாந்தன் ஜனனி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இந்த நிகழ்வில்,
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவரைச் சந்தித்த தமிழ் மக்கள் பேரவை!
நாடாளுமன்ற அமர்வு ஜூலை ஏழு முதல் 10 வரை!
யாழ்.மந்துவில் RCTMS பாடசாலை கட்டடத்திற்கு அடிக்கல்!
சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு!