நெடுந்தீவில் கடற்றொழில் சங்க கட்டடத்தை திறந்துவைத்தார் சிறிதரன் எம்.பி.!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கடற்றொழில் சங்க கட்டடம் இன்று(16) திறந்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழில் சங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கான ஏனைய தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

Exit mobile version