நெடுந்தீவுக்கான அரச படகு சேவை நேரமாற்றங்கள்!

நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை , நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 13 முதல் இந்த படகு சேவை நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

நெடுந்தீவில் இருந்து பி.ப. 3.00 மணிக்கு புறப்படும் படகு மீண்டும் குறிகாட்டுவானிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.

ஞாயிற்றுகிழமைகளில் நெடுந்தீவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் படகு மீண்டும் குறிகாட்டுவானில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும்.

குமுதினி படகு சேவையில் எந்த மாற்றங்களும் இல்லை என பிரதேச செயலர் குறிப்பிட்டார்.

Exit mobile version