அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக நெடுந்தீவுக்கான படகு சேவைகள் முற்றாகச் செயலிழந்துள்ளதாக
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்டச் செயலகத்தில் தற்போது இடம்பெற்றுவருகிறது.



இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
குமுதினி,வடதாரகை, நெடுந்தாரகை ஆகிய படகுகள் நெடுந்தீவுக்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

அதில், வடதாரகை, நெடுந்தாரகை ஆகியன பல மாதங்களாக சேவையில் இல்லை. குமுதினி படகும் பழுதடைந்துள்ளதால் நேற்று முதல் சேவையில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண பொறியலாளர் படகுகளைத் திருத்துவதற்கு கூறுவிலை கோரப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

நல்லூர் தேர்த் திருவிழாவை முன்னிட்டு யாழ் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு விடுமுறை!