கிளிநொச்சி பளை நகரில் டிப்பரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(29) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதான குமாரசாமி செல்வவதி வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து,டிப்பர் வாகனத்தின் சாரதி பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!