அதிகரிக்கப்பட்டுள்ள புதிய போருந்துக் கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.
இதனைப் பின்பற்றத் தவறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
அதனை மீறிச் செயற்படுவோரின் பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது
பேருந்துக் கட்டணங்கள் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் யவகையில் 12.19 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!