அமெரிக்காவுடன் நிலவும் மோதல் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தயாரிக்கப்படவுள்ள புரிந்துணர்வு வரைவில் இன்னும் பல தெளிவற்ற அம்சங்கள் நீடிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், தற்போதைய வரைவு ஆவணத்தில் சில முக்கிய விடயங்கள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைக்கும் நிபந்தனைகளை ஈரான் ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் செலுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேவேளை, தெஹ்ரான் முன்வைக்கும் நிபந்தனைகள் தொடர்பாக தெளிவற்ற நிலையைத் தொடரச் செய்வதிலேயே டிரம்ப் ஆர்வம் காட்டுவதாகவும் மொஹ்சென் ரெசாய் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் எதிர்காலம் குறித்து சர்வதேச கவனம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!