“தமக்கான இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்.சாவகச்சேரி மீசாலையில் இன்று(16) ஆரம்பித்து வைத்தார்.
முதலில் மீசாலை கிழக்கு J/318 கிராம அலுவலர் பிரிவில் வீட்டுக்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டிவைத்தார்.



அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.




இதன்போது யாழ்.மாவட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம்.சுனில் ரணசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலர்கள் அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



T20 12 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
நானுஓயா-ரதல்ல திடீர் விஜயம்: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி
இலங்கைப் போக்குவரத்து சபையினால் பெண் நடத்துநர்கள் நியமனம்!
ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதிப் புனரமைப்பை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க!