வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!