300 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

முந்நூறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள், Wi-fi ஆண்டெனாக்களை வழங்குவதாக உறுதியளித்து, பொருட்களை வழங்கத் தவறி, ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூபா 36,989,684 மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சந்தேக நபர்கள் நேற்று (24) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 37 வயதுடைய மட்டக்குளி மற்றும் வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்கள் நேற்று (24) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version