கட்டுரைகள்

வடக்கு கிழக்கில் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கொடிகாமம் துயிலும் இல்லம்

மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

பொதுச்சுடரை லெப்டினன் மேரியனின் தாயார் கந்தையா நாகராணி, நட்டுப்பற்றாளர் கந்தையா காண்டீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

சாட்டி துயிலும் இல்லம்

தீவகம் சாட்டி துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

உடுத்துறை துயிலும் இல்லம்

வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

கோப்பாய் துயிலும் இல்லம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தேரால் துயிலும் இல்லம்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூயிலும் இன்றுமாலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button