கட்டுரைகள்
Trending

மன்னாரில் வெள்ளத்தில் மூன்று நாட்களாக சிக்கிய குடும்பம்:உலங்கு வானூர்தியூடாக மீட்பு!

புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் சிக்கியிருந்த மன்னாரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகியோர் உலங்கு வான்னூர்தி மூலம் இன்று(30) மீட்க்கப்பட்டனர்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் வேண்டுகோளிற்கேற்ப இலங்கை விமானப்படையின் உதவியுடன் குறித்த குடும்பத்தினர் உலங்கு வானூர்தி ஊடாக நலமாக மீட்கப்பட்டனர்.

மீட்க்கப்பட்டவர்கள் வவுனியா ஜோசப் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் வவுனியா தள வைத்தியசாலை அனுப்பப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button