இலங்கை
Trending

2700 வெளிநாட்டு பயணிகளுடன் இலங்கைக்கு வந்த கப்பல்!

நாட்டில் அனர்த்தம் ஏற்பட்ட போதிலும், நமது நாட்டை தரிசிக்க விரும்பும் வெளிநாட்டவரின் ஆர்வமும், வருகையும் இன்னும் குறையவில்லை. கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று (4) வந்த ஆடம்பரமான ‘மைன் ஷிஃப்’ கப்பலை வரவேற்பதில் வெளிவிவகார அமைச்சர் இணைந்து கொண்டார்.

இலங்கைக்கு 2700 பயணிகளுடன் வந்த பெரிய சுற்றுலா கப்பல்
இலங்கைக்கு வந்த 2700 சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பல் – கொழும்பு துறைமுகம்.

TUI குரூஸால் இயக்கப்படும் 900 பணியாளர்களைக் கொண்ட ஜெர்மன் கப்பலான ‘மைன் ஷிஃப்’ 2700 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது.

இலங்கைக்கு வந்த சுற்றுலா கப்பலில் இறங்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் படம்

கேப் டவுனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இலங்கை வந்துள்ள இந்தக் கப்பலில் வந்துள்ள திருமதி மார்கிராட் என்பவர் 1992 ஆம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வாங்கிய நெக்லஸை இன்னும் அணிந்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button