கட்டுரைகள்
கனமழை காரணமாக திருகோணமலை – சம்பூர் – மாவிலாறு அணையின் ஒரு பகுதி நேற்று(30) உடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இன்றைய (டிசம்பர் 01) நிலவரப்படி, பேரிடரால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கல்கந்த விஹாரஸ்தான வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், கடற்படையின் தரையிறங்கும் கப்பல்,தரையிறங்கும் படகு மற்றும் கடலோர ரோந்து படகு ஆகியவை மூதூரை அண்டிய கடல் பகுதியில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
Follow Us



