
இலங்கையில் இடம்பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் அனுப்புவதற்கான புதிய நடைமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நன்கொடைகள் சுங்கத் திணைக்களத்தால் தாமதமின்றி விடுவிக்கப்படுவதற்காக இந்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அனுப்பும் நன்கொடைகள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் பெயரில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
தனிப்பட்ட நபர்கள் அல்லது அமைப்புகள் அனுப்பும் நன்கொடைகள்
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) பெயருக்கு அனுப்பப்படுமாயின் சுங்கவரி விலக்களிக்கப்படும்.
மேலும், அனர்த்த உதவி உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி பொருட்களை அனுப்பமுடியும் என அந்த அறிக்கையில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள மற்றும் நன்கொடைகளை பதிவு செய்துகொள்ள www.donate.gov.lk என்ற இணையதளத்தை பார்வையிடமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



