
பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு எட்டு வரை பூட்டு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி வரை மூடப்படும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அவை மீளத் திறக்கப்படும் திகதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதிக் கல்வி அமைச்சர் மதுர செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
Follow Us



