
கண்டி மாவட்டத்திலுள்ள நீர் வழங்கல் அமைப்புகளில், பெரும் தடையாக இருந்த கட்டுகஸ்தோட்டை நீர் வழங்கல் அமைப்பு தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்டி வைத்தியசாலை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பவுசர்கள் மற்றும் மாற்று வழியில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தில் சுமார் 80% நீர் விநியோகம் நீர் வழங்கல் அமைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு பவுசர்கள் மற்றும் மாற்று வழிமுறைகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் மீவத்துர நீர் வழங்கல் அமைப்புகள், பதுளை மாவட்டத்தில் அம்பா கஸ்தோவ மற்றும் மஹியங்கனை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சோண்டுவட்டுவான் ஆகிய நீர் வழங்கல் அமைப்புகள் முற்றிலுமாக செயலிழந்து போயுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை போன்ற நீர் வழங்கல் அமைப்புகளை மீட்டெடுக்க முப்படைகளின் உதவியைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அணுகல் சாலைகள் தடைபட்டதால் அவற்றை அடைய முடியாது உள்ளதாக சபை விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையால் இயக்கப்படும் 342 நீர் திட்டங்களில், சுமார் 150 நீர் திட்டங்கள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அவற்றில் 17 திட்டங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
குழாய்களுக்கு சேதம், மின்சாரம் தடை, நீர் உட் புகும் இடங்களில் வெள்ளம் மற்றும் மின்சாரம் மற்றும் இயந்திர உபகஇந்துரணங்களுக்கு சேதம் ஏற்பட்டதால், இந்த திட்டங்களை மீட்டெடுக்க கணிசமான நேரம் எடுக்கும்.
இவற்றில், 7 நீர் வழங்கல் திட்டங்கள் அடைபட்ட மோசமான வீதி காரணமாக மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளன.
நாடு முழுவதுமுள்ள வைத்திய சாலைகளுக்கு பவுசர்கள் மற்றும் மாற்று நீர் அமைப்புகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது,
அதே நேரத்தில் சபை பாதுகாப்புப் படைகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை , ரயில்வே திணைக்களம் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் இணைந்து மற்ற பகுதிகளில் நீர் விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.



