கட்டுரைகள்
Trending

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்!

நிவாரணங்கள் வழங்கவும் ஏற்பாடு!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து இன்று (03) கலந்துரையாடினார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழக்கமான இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக துணைத்தூதுவர், சாய்முரளி தெரிவித்தார்.

உடனடி உதவிகள், மீள்கட்டுமான உதவிகள், நிரந்தரத் கட்டுமாணங்கள் என மூன்று கட்டங்களில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்கினால், உதவிகளை விரைந்து வழங்க முடியும்.

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இத்தகைய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button