கட்டுரைகள்
Trending

வடக்கில் பேரிடரால் அழிவடைந்த ஏழு பிரதான வீதிகள் புனரமைப்பு !

சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன.

இதற்கமைய, அரச திணைக்களங்கள், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் பின்வரும் வீதிகள் மிகக் குறுகிய காலத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் பண்ணை வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை – கேப்பாப்பிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் 25 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பூவரசன்குளம் – செட்டிக்குளம் வீதி 50 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

மாந்தைமேற்கில் மாந்தை பரப்புக்கடந்தான் வீதி 5 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

கட்டாடுவயல் – இராமயன்குளம் வீதி 500 மீற்றர் திருத்தப்பட்டுள்ளது.

மகிழங்குளம் – பள்ளமடு வீதி 40 மீற்றர் திருத்தப்பட்டு வருகின்றது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பேரிடரால் திடீரென சேதமடைந்த கற்சிலைமடு பேராறுப்பாலம், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் உடனடியாகத் திருத்தியமைக்கப்பட்டுப் பொதுமக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button