கட்டுரைகள்
Trending

மாணவர்களுக்கு கல்வி உதவியைப் பெற்றுக்கொடுக்க புதிய வங்கிக் கணக்குகள் அறிமுகம்!

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி உதவியை பெறும் நோக்கில் வங்கிக் கணக்குகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வங்கி கணக்குக்குகளுக்கு அனுப்பப்படும் நிதிக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி உள்ளிட்ட அமைச்சுகள் நேரடியாக பொறுப்புக்கூறும் என்றும்,

இக்கட்டான இந்தத் தருணத்தில் மக்கள் வழங்கி வரும் பங்களிப்பைப் பாராட்டுவதாகவும்,

அதேவேளை, மாணவர்களுக்கான நிதிப் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்கும் போது, அதன் நம்பகத்தன்மை குறித்து மக்கள் கவனத்துடன் இருக்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button