கட்டுரைகள்
Trending

ரயில் ‘சீசன் டிக்கெட்டுகளை’ பயன்படுத்தி அரச பேருந்தில் பயணம் செய்யும் வசதி!

ரயில் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) சாதாரண பஸ்களில் பயணம் செய்ய உடன் அமுலுக்குவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் உருவாகியுள்ள அனர்த்த நிலையை முன்னிட்டு, இலங்கைப் போக்குவரத்து சபை (SLTB) இந்த போக்குவரத்து ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்திற்கொண்டு இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை போக்குவரத்து சபையின் லக்சரி (ஏசி) மற்றும் சிறப்பு சேவைகளில் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button