
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (05) கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் துவிச்சக்கரவண்டி ஒன்றை திருடியபோது கண்காணிப்பு கமெரா மூலம் அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டதோடு 12 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Follow Us



