இலங்கைமலையகம்
Trending

மலையக நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன!

மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.

மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்று (07) முற்பகலில் இன்னும் மூன்று அங்குலம் மட்டுமே நிறைய வேண்டிய நிலையில் இருந்தது.

அதேபோல் கென்யோன் லக்சபான, பொல்பிட்டிய நவலக்சபான, கலுகல காசல்ரீ, விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளன.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் மின் நிலையங்களில் தற்போது நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்துக்கள் அதிகரித்துள்ளன.

மீண்டும் தொடர் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடவேண்டிய நிலைமை உருவாகும்.

ஆகையால் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் கரையோர பகுதியிலுள்ள அனைத்து மக்களும் மற்றும் களனி கங்கை கரையோர மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் கென்யோன் நீர்தேக்கத்தின் கட்டளை அதிகாரி கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button