இலங்கைமலையகம்
Trending

மலையக பிரதேச புனரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைதையில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட செயலகங்களில் நேற்று (06) இடம்பெற்றது.

அனர்த்த நிலைமையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரச சேவை மற்றும் முப்படையின் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது பாராட்டினார்.

அதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி, “அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்குவதற்காக துல்லியமான தரவுகளை வேறுபடுத்திக்கண்டறிய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், நெடுஞ்சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், தொடர்பாடல் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றை புனரமைத்தல் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்”- என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button