திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி!

அம்பாறை திருக்கோவில் – பொத்துவில் வீதியில் காஞ்சரன்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு(10) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்று வேகக்கட்டுபட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

திருக்கோவில் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தரான பத்பநாதன் யதர்ஷன்(36) என்ற இளம் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் திருக்கோயில் ஆதாரம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version