
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட
குடும்பங்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அனர்த்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.


அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் அமைச்சர் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கச் செய்வதற்காக மாவட்டச் செயலாளர், கிராம அதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூடி ஆலோசனைகள் நடத்தினார்.

அதேவேளை, சேதமடைந்த வீடுகள், ஆபத்தான மலைச்சரிவுகள், தாழ்வான நிலப்பகுதிகள் போன்றவை பற்றிய தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கூடிய நிலை ஏற்படுத்துவதற்கான மறுசீரமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உளவியல் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ பராமரிப்பு ஆகியவை கூடுதல் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.



