உலகம்
Trending
வடகிழக்கு ஜப்பானில் இன்று (12) காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று(12) காலையில் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் அமோரி மாகாண கடற்கரையில் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலைகள் 1 மீற்றர் வரை எழக்கூடிய அளவிற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதே பகுதியில் கடந்த திங்கட்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்றும் ஏற்பட்டிருந்தது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டோக்கியோவின் கிழக்கேயுள்ள வடக்கு ஹொக்கைடோவிலிருந்து சிபா வரையிலான பகுதி மக்களுக்கு, மற்றொரு வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்பதால், விழிப்புடன் இருக்குமாறு அரசாங்கம் சிறப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Follow Us



