
மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (10)இரவு, பள்ளிமுனைப் பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 06 கிலோ 115 கிராம் கஞ்சாவுடன் துவிச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Follow Us