
யாழ்.மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்றிரவு(10) கையளிக்கப்பட்டன.
மயிலிட்டி முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்போடு இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள், வடக்கு மாகாண ஆளுநர் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டன.
இதனையடுத்து, வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய குறித்த அமைவாக, பொதிகள் நேற்றைய தினமே கண்டி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டன.

Follow Us



