இலங்கைவடக்கு மாகாணம்
Trending

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பு 15 ஆம் திகதி இல்லை!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் வாராந்த ‘பொதுமக்கள் சந்திப்பு” எதிர்வரும் திங்கட்கிழமை(15) நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு அடுத்த வார திங்கட்கிழமை (22.12.2025)வழமை போன்று ஆளுநர் செயலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும் என ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு, தமது வருகையைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button