வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ் வர்த்தக சங்கம் உதவி!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகுதி பாய், படுக்கை விரிப்புகள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தால் இன்று (11) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளிக்கப்பட்டது.



இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் தேவைப்பாடுகளை மேலும் சாதகமாக பரிசீலித்து வழங்குவதாகவும், ஏனைய ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வர்த்தக சங்கம் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜனத்குமார் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சூதாட்ட தோல்வியால் காதலியின் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடிய காதலன்!
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது தொழில் முனைவோராகவும் மாறவேண்டும் – வடக்கு ஆளுநர்!
ஒரு இளைஞனின் மரணம்: இரண்டு உயிர்களை காப்பாற்றிய மனிதநேயம்!
அனர்த்த நேரத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மழை அங்கிகள் வழங்கி வைப்பு.!