இலங்கைவடக்கு மாகாணம்
Trending

வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம்: கிராம சேவையாளருக்கு எதிராக 16 வயது மாணவன் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக 16 வயது மாணவனால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்தி அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது, “சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்ப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் கல்லுண்டாயில் வசிக்கும் யோகநாதன் ராயித் ஆகிய எனக்கு தந்தை இல்லை, தாயின் பாராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வார்ந்து வருகின்றேன். எனது வயது 16 புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்து வருகிறேன்.

எனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்கு வேலைக்கு சென்று 3 மாதகாலமாகின்றது.

ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.

எனது அம்மம்மாவும் அவர்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் எனது தாயார் உள்ளார்.

எனது தாயாரே முழு குடும்ப சுமையையும் தாங்கி வருகிறார்.

எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.

ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்ல வில்லை. வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளதாக எனவே உறவினர்கள் சென்று பர்வையிட்டு வந்து கூறினார்.

அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியை எனது தாயார் கிராம சேவையாளரிடம் தரும்படியும், பதிவை மேற் கொள்ளுமாறும் கேட்டார், ஆனால் கிராம சேவையாளர் அதை மறுத்து விட்டார்.

ஆனால்,குறித்த குடியிருப்பில் வாழாத குடும்பங்காருக்கு கொடுத்துள்ளார். ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலதிகாரிகளிடமும் எனது தாயார் கதைத்து சாதகமான முடிவுகள் கிடைக்காத காரணத்தால் அரச அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button