வேலணை பிரதேச சபை பாதீடு மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றம்!

வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 12 வாக்குகளால் நிறைவேறியது.

தமிழரசுக் கட்சியின் ஆட்சியிலுள்ள 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் பாதீடு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் இன்று(17) சமர்ப்பிக்கப்பட்டது.

வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில் பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது ஆதரவாக 18 வாக்குகளும், எதிராக 4 வாக்கிகளும் அளிக்கப்பட்டன. அதனால் 12 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்கள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆக 04 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

ஆதரவாக தமிழரசுக்கட்சியின் 8 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக்க கட்சியின் 4 உறுப்பினர்களும், சுயேட்சை குழுக்களின் 3 ஆசனங்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,தமிழ் மக்கள் முன்னணி, ஐக்கியதேசியக் கட்சி ஆகியவற்றின் தலா ஒவ்வொரு வாக்குகளாக 18 வாக்குகள் அளிக்கப்பட்டன.

Exit mobile version