பத்து மருந்து வகைகளுக்கு தடை விதித்தமைக்குரிய காரணங்களை தரவேண்டும்: இல்லாவிடில் சுகாதார துறையில்மீது நம்பிக்கை அற்றுப்போகும் - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க!

மான் பார்மகியூட்டிகல்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் ஒந்தன்செட்ரொன் உள்ளிட்ட 10 மருந்து வகைகளுக்கு தற்காலிக தடை விதித்தமைக்குரிய காரணத்தை கூறவேண்டும் இல்லாது போனால் சுகாதாரதுறை மீதான மக்களின் நம்பிக்கு அற்றுப்போகும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
மான் பார்மகியூட்டிகல்ஸ் (MAAN Pharmaceuticals) நிறுவனத்தினால் நாட்டுக்கு விநியோகிக்கப்படும் ஒந்தன்செட்ரொன் (Ondansetron) உள்ளிட்ட 10 மருந்து வகைகளை அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டிருந்தது.
சம்பந்தபட்ட நிறுவனத்திடம் 28 நாட்களுக்குள் தெளிவான விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்கவின் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று(17) இடம்பெற்றது.
அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஒந்தன்செட்ரொன் மருந்து உற்பத்தியின்போதே அதன் தரத்தில் சீர்கேடு ஏற்பட்டுள்ளதா என்பதைத் தேடிபார்க்க வேண்டும். மருந்துகள் பொதுவாக களஞ்சிய செயற்பாடுகளிலும் தர நிலைமை, மருந்து போக்குவரத்து நடவடிக்கைகளில் மருந்திரன் தரத்தின் மாற்றம் ஏற்படக் கூடும்.
ஆனால், இந்த மருந்து தொகை நாட்டுக்குள் வரும்போதே தரம் தொடர்பிலோ அல்லது அந்த மருந்திலுள்ள உள்ளீடுகளில் சிக்கல் நிலை இருந்ததா என்பது தொடர்பில் தேடிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
பொதுவான மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும்போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆய்வுகூடங்களினூடாக இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசிமாகும்.

அதன்படி இந்த மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா, அதன்போது ஏதாவது பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டதா, அப்படியொரு பிரச்சினை இருக்கவில்லையா என்பது தொடர்பாக ஆராய” வேண்டும். இந்த விடயங்கள் குறித்து பதில் தேட வேண்டியது அவசியமாகும்.
எனவே, சுகாதார அமைச்சு, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருந்தபோதும் இந்த மருந்துடன் தொடர்புடையவகையில் இரு மரணங்கள் குறித்து சந்தேகத்துக்கிடமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த மரணங்களுக்கு ஒந்தவிடியும் “_ன்செட்ரொன் என்ற தடுப்பூசியே காரணம் என்ற விடயம் எந்தவொரு இடத்திலும் உறுதியாகவில்லை. பரிசோதனைகளை தொடர்தே இதுதொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.
இந்த மருந்து பயன்பாடு தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இதேவேளை, 150 வரையான மருந்துகளுக்கு தட்டுபாடு நிலவுகிறது. இதற்கிடையில் நேற்று(16) தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விசேட அறிவித்தலொன்றை விடுத்து மான் பார்மகியூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் மேலும் 09 மருந்து வகைகள் அதாவது ஒந்தன்செட்ரொன் மருந்து உள்ளடங்களாக 10 மருந்து வகைகளை அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சு மற்றும் தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையால் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, 28 நாட்களுக்குள் தெளிவான விளக்கமும் முழு அறிக்கையும் சம்பந்தபட்ட மான் பார்மகியூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள மருந்துகளில் மிகவும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு தொடர்ந்தும் பயன்படுத்தப்படும் என்டிபயொடிக் மருந்துகளும் உள்ளடங்குகின்றன.
இந்த மருந்துகளுக்காக பயன்படுத்தப்படும் மாற்று மருந்துகள் தொடர்பிலும், எதற்காக இவ்வாறு திடீரென 10 மருந்துகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது என்பது தொடர்பாக மக்களுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் சுகாதார துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை படிபடியாக இல்லாமல் போகும்” – என்றார்.



