
யாழ்ப்பாணம் தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகலில் (22) இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் ‘மதனமோதக’ என்ற போதை பொருள் உட்கொண்ட நிலையிலேயே சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்.நாவற்குழி பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே மாணவர்களுக்கு குறித்த போதைப்பொருளை வழங்கிவந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதனையடுத்து குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைதான மாணவர்களை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் நாளை(24) ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Follow Us



