
வவுனியா வீரபுரம் பகுதியில் நேற்று(21) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் உட்பட சிலர் நேற்று மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதன்போது அவர்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதோடு இதனுடன் தொடர்புடைய சிலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு,விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



