
யாழ்ப்பாணம் – கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வித்தியா கணபதி மீது பாடப்பட்ட “வித்தியா கணபதி பாமாலை” இறுவட்டு இன்று(24) வெளியிட்டு வைக்கப்பட்டது.

வித்தியாலய முதல்வர் திருமதி. சி. கணேசானந்தன் தலைமையில், வித்தியா கணபதி ஆலய முன்றலில் பூசை வழிபாடுகளோடு இசை வட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
இறுவட்டை முல்லைத்தீவு சண்முகரட்ணம் வித்தியாலய ஆசிரியர் ம.மணிவண்ணனும் அவரது பாரியாரும் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

இசை வட்டுக்கான பாடல் வரிகள் மற்றும் இசையமைப்பை ஆசிரியர் எஸ்.ஜே.என். றொசான் வழங்கியிருந்தார்.
தயாரிப்பு மேற்பார்வையை திருமதி. ப. வாகீசனும், காணொளி வடிவமைப்பை ஆசிரியர் சி.பிரதீபனும் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



