யாழ்ப்பாண நகரில் பாடசாலை மாணவன் உட்பட 10 பேர் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

17 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட 10 பேர் இவ்வாறு நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நடாத்திய சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும்,போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும், கேரள கஞ்சாவுடன் ஒருவருமாக கைது இடம்பெற்றுள்ளது.

விசாரணைகளையடுத்து யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version