யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாலயங்களில், நத்தார் நள்ளிரவு (25) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வுகள் மற்றும் ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.
யாழ்.மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நிகழ்வு, புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்றது.


புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இதேவேளை,வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திலும் நள்றிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வும், ஆராதனைகளும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து சென் பிலிப் நேரி மறைக்கல்வி மாணவர்களால் கரோல் பாடல்கள் இசைக்கப்பட்டன.


பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவராக கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன்!
யாழ்.மாவட்ட செயலக புதுவருட கடமைகள் ஆரம்பம்!
ஜெஹான் பெர்னாண்டோவுக்கு 09 வரை விளக்கமறியல்!