
கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தின் “துயர் சுமந்த கரைகள்” இசை இறுவட்டு இன்று(26) வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்டைக்காடு சென்மேரிஸ் சுனாமி நினைவாலயத்தில் இடம்பெற்றது.



இதன்போது ” துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியிடப்பட்டது.
யெ.யெமிலின் கவிதை வரிகளில், மைக்கல் சார்ள்ஸின் இசையில், Jmic studio வின் ஒலிப்பதிவில், யே.றெஜி,றா.விஜி,யோ.பிரியங்கா, செ.சபஸ்ரியன் ஆகியோரின் குரல்களில் இந்த இசை இறுவட்டு வெளிவந்துள்ளது.
கட்டைக்காடு பங்குத் தந்தை வசந்தன் அடிகளார் இறுவட்டை வெளியிட்டு வைக்க, ஆழிப்பேரையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
Follow Us



