
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டுவந்த மாகந்துரே மதுஷ் என்பவருக்கு வழங்கிய குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு டக்ளஸ் தேவானந்தா இன்று(26) அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னிலையாகியிருந்த நிலையிலேயே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow Us



