யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

சுனாமி ஆழிப் பேரலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (26) இடம்பெற்றது.

இதன்போது, காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் இணைந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், சுனாமி பேரவலத்தின் தாக்கங்கள், அதிலிருந்து பெற்ற பாடங்கள் மற்றும் எதிர்காலத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அரச அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version